TNTET Special TET Science Movements in Animals Notes

உயிரினங்களின் இயக்கம் மற்றும் மனித உடல் மண்டலம்

எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைகளின் அறிவியல் குறிப்புகள்

உயிரினங்களின் இயக்கம்

  • ✔ மண்புழு: பல வளையங்களைக் கொண்டது. இதன் இயக்கத்திற்கு உதவும் உடல் நீட்சி 'சீட்டா' (Setae) எனப்படும்.
  • ✔ கரப்பான் பூச்சி: 
  1. 3 ஜோடி இணைந்த கால்கள் மற்றும் 2 ஜோடி இறக்கைகளைக் கொண்டது. 
  2. இதன் வெளி உடல் 'கைட்டின்' (Chitin) உறைபொருளால் ஆனது. 
  3. ஆறு கால்களுடன் வேகமாக நடக்கும் உயிரினிமிது. 
  4. இதன் வேகம் வினாடிக்கு 1 மீட்டர் ஆகும்.
  • ✔ பறவை: பறவைகளின் எலும்புகள் உள்ளீடற்றவை மற்றும் காற்று இடைவெளிகளைக் கொண்டவை (Pneumatic bones).
  • ✔ மீன்: 
  1. இரண்டு இணையான துடுப்புகள் மற்றும் ஒரு இணையற்ற துடுப்பைக் கொண்டது. 
  2. மீனின் வால் துடுப்பு 'காடல் துடுப்பு' (Caudal fin) எனப்படுகிறது.
  • ✔ பாம்பு: அதிக எண்ணிக்கையில் முள்ளெலும்புகளை (Vertebrae) உடைய விலங்கு.
  • ✔ அமீபா: போலிக்கால்கள் (Pseudopodia) மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. பரமேசியம் புறத்தோல் ரோமமான சிலியா மூலம் நகர்கிறது.
  • ✔ வேகமான விலங்குகள்: 
  1. சிறுத்தை மணிக்கு 76 கி.மீ வேகத்தில் ஓடும். 
  2. மனிதனை விட வேகமாக ஓடக்கூடிய விலங்கு நீர்யானை. 
  3. கடலில் வேகமாக நீந்தும் டால்பின் உயிரினம் 35 மைல் வேகத்தில் நீந்தும்.

மனித எலும்பு மண்டலம் மற்றும் மூட்டுகள்

மனித உடல் எலும்பு மண்டலத்தால் கட்டப்பட்டுள்ளது. மனித உடலின் முக்கிய இயக்கங்கள் 6 பகுதிகளில் நிகழ்கின்றன (கண், இதயம், பல், கை/கால், தலை, கழுத்து). உடல் இயக்கங்களுக்கு எலும்புகள் ஆதாரமாக உள்ளன.

எலும்பு மூட்டுகளின் வகைகள்:

  • பந்து கிண்ண மூட்டு: தோள்பட்டை மற்றும் இடுப்பில் உள்ளது. இது மனித உடலின் மிகப்பெரிய இயக்கமாகும் (மூன்று திசை இயக்கம்).
  • கீல் மூட்டு (Hinge joint): முழங்கால், முழங்கை மற்றும் கணுக்காலில் உள்ளது. வளைக்கவும் நேராக்கவும் பயன்படும் ஒரு திசை இயக்கம்.
  • சுழல் அச்சு மூட்டு (Pivot joint): முள்ளெலும்புச் சுழல் அச்சு முனை மூட்டு. நீளமான அச்சைப்பற்றி சுழலும் ஒரு திசை இயக்கம்.
  • முண்டு மூட்டு (Condyloid joint): மணிக்கட்டில் காணப்படுகிறது. பந்து கிண்ண மூட்டைப் போன்றது (இரண்டு திசை இயக்கம்). இது இரண்டாவது மிகப்பெரிய இயக்கமாகும்.
  • சேண மூட்டு (Saddle joint): கட்டைவிரல், தோள்பட்டை, உட்செவி ஆகியவற்றில் காணப்படுகிறது. இதன் ஒரு முனை குழிந்தும் (உள்நோக்கி), மறுமுனை குவிந்தும் (வெளிநோக்கி) இருக்கும். இது நெகிழ்வு, நீட்டிப்பு, கடத்துதல் மற்றும் திரும்பும் சேர்க்கை இயக்கமாகும்.
  • அசையாத மூட்டு: மேல் தாடை மற்றும் மண்டை ஓடு.

எலும்புகள் மற்றும் இணைப்புத் திசுக்கள்

எலும்பு - தசை இணைப்பு டெண்டான் (Tendon) - இது மீள்தன்மை கொண்ட திசுவாகும்.
எலும்பு - எலும்பு இணைப்பு லிகமெண்ட் (Ligament) - இது கடினமான பட்டை போன்ற இணைப்புத் திசுவாகும்.
சினோவியல் மூட்டு குருத்தெலும்பு திரவம் நிரம்பிய குழி மூட்டு (டை-ஆர்த்ரோசிஸ் மூட்டு).
இரத்த சிவப்பணு உற்பத்தி எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow) உற்பத்தி ஆகிறது.
உடல் கட்டமைப்பு தாதுக்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.
மிக நீளமான எலும்பு தொடை எலும்பு அல்லது பீமர் (Femur).
மிகச்சிறிய, லேசான எலும்பு
  1. நடுச் செவியில் உள்ள அங்கவடி எலும்பு (Stapes).
  2. வெளிக்காது மற்றும் மூக்கு நுனிப்பகுதி கடின மீள்தன்மை கொண்ட 'குருத்தெலும்பினால்' ஆனது.
  3. நத்தைக்கு எலும்பு மற்றும் தசை கிடையாது.

அச்சு மற்றும் இணையுறுப்புச் சட்டகம்

  • அச்சு எலும்புக்கூடு (Axial Skeleton): உடல் மற்றும் தலைப் பகுதியைக் கொண்டது.
  • மண்டை ஓடு: 
  1. மொத்தம் 22 எலும்புகள். 
  2. மூளையைப் பாதுகாக்கும் கிரேனியம் (Cranium) 8 எலும்புகளையும், முகப்பகுதி 14 எலும்புகளையும் கொண்டுள்ளது.
  • முதுகெலும்புத் தொடர்: 
  1. இது 33 முள்ளெலும்புகளைக் கொண்டது
  2.  (12 மார்பு, 5 இடுப்பு, 5 திருவெலும்பு). 
  3. இதன் செயல்பாடு தட்டையானது 
  4.  மூன்று கோண அசைவுகளைக் கொண்டது.
  • கழுத்தெலும்பு: மனிதன் மற்றும் ஒட்டகச்சிவிங்கிக்கு சமமாக 7 கழுத்து எலும்புகள் மட்டுமே உள்ளன.
  • விலா எலும்புகள்: தோள்பட்டை இணைப்புடன் கூடிய 12 ஜோடி எலும்புகள்.
  • வளையங்கள்: 
  1. கை மற்றும் தோள்பட்டை இணைப்பு 'பெக்டோரல் வளையம்' எனவும், 
  2. கால் மற்றும் இடுப்பு இணைப்பு 'பெல்விக் வளையம்' எனவும் அழைக்கப்படுகிறது.
  • கை எலும்புகள்: 
  1. மேற்கை எலும்பு (ஹியூமரஸ்), 
  2. முழங்கை எலும்பு (ஆரை எலும்பு - Radius, அல்னா - Ulna), 
  3. மணிக்கட்டு எலும்பு (கார்பல்கள்), 
  4. உள்ளங்கை எலும்பு (மெட்டா கார்பல்கள்), 
  5. விரல் எலும்பு (ஃபாலாஞ்சஸ்).
  • கால் எலும்புகள்: 
  1. தொடை எலும்பு (பீமர்), 
  2. முழங்கால் மூட்டு (பட்டெல்லா),
  3. முழங்கால் கீழ் எலும்புகள் (டிபியா, பிபுலா).

மனித தசை மண்டலம்

தசை என்பது சுருங்கி விரியும் தன்மையுடைய திசுவாகும். எலும்புகளை இணைக்கும் திசுவாக வரித்தசை உள்ளது.

வரித்தசை (Skeletal Muscle)

இது பல உட்கருக்களைக் கொண்டது. இவை தன்னிச்சையான தசைகள் ஆகும் (எ.கா: கை, கால், கழுத்து). இத்தசைகளுக்குக் கிளைகள் கிடையாது.

வரியற்ற தசை (Smooth Muscle)

இது ஒற்றை மையக் கருவைக் கொண்டது. மென்மையான மற்றும் தன்னிச்சையற்ற தசைகள் ஆகும் (எ.கா: இரத்த நாளம், கருவிழி, மூச்சுக்குழாய், தோல், இரைப்பை). முடியின் வேரிலும் இத்தசை உள்ளது.

இதய தசை (Cardiac Muscle)

  1. இது 1 முதல் 3 மையக் கருக்களைக் கொண்டது.
  2.  இதுவும் தன்னிச்சையற்ற தசையாகும்.

சுவாரஸ்யமான தசை உண்மைகள்:

  • கண்பாவையை அகலமாக்குவது ரேடியல் தசை; சிறிதாக்குவது வட்டத்தசை.
  • மனித உடலில் அதிகமாக வேலை செய்யும் தசை கண் தசை ஆகும்.
  • ஒரு மனிதன் புன்னகை செய்ய 17 தசைகளும், தேவைப்படுகின்றன.
  • கோபப்பட 42 தசைகளும் தேவைப்படுகின்றன.
  • மேற்கையின் முன்பகுதியில் உள்ள இருதலை தசை (Biceps) நெகிழ்வு தசையாகவும் செயல்படுகின்றன.
  • மேற்கையின் பின்பகுதியில் உள்ள முத்தலை தசை (Triceps) நீட்சித் தசையாகவும் செயல்படுகின்றன.
  • கைத் தசைகள் சுருங்கும் போது முத்தலை தசை செயல்படுகிறது, 
  • கைத் தசைகள் தளரும் போது இருதலை தசை செயல்படுகிறது.

Comments

Popular posts from this blog

NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

NTSE -NMMS- TRUST (MAT) -Venn Diagrams Quiz 1-25 - Online Test - Part-02

NMMS SAT 8th Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021