TNTET Special TET Science Movements in Animals Notes
உயிரினங்களின் இயக்கம் மற்றும் மனித உடல் மண்டலம் எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைகளின் அறிவியல் குறிப்புகள் உயிரினங்களின் இயக்கம் ✔ மண்புழு: பல வளையங்களைக் கொண்டது. இதன் இயக்கத்திற்கு உதவும் உடல் நீட்சி 'சீட்டா' (Setae) எனப்படும். ✔ கரப்பான் பூச்சி: 3 ஜோடி இணைந்த கால்கள் மற்றும் 2 ஜோடி இறக்கைகளைக் கொண்டது. இதன் வெளி உடல் 'கைட்டின்' (Chitin) உறைபொருளால் ஆனது. ஆறு கால்களுடன் வேகமாக நடக்கும் உயிரினிமிது. இதன் வேகம் வினாடிக்கு 1 மீட்டர் ஆகும். ✔ பறவை: பறவைகளின் எலும்புகள் உள்ளீடற்றவை மற்றும் காற்று இடைவெளிகளைக் கொண்டவை (Pneumatic bones). ✔ மீன்: இரண்டு இணையான துடுப்புகள் மற்றும் ஒரு இணையற்ற துடுப்பைக் கொண்டது. மீனின் வால் துடுப்பு 'காடல் துடுப்பு' (Caudal fin) எனப்படுகிறது. ✔ பாம்பு: அதிக எண்ணிக்கையில் முள்ளெலும்புகளை (Vertebrae) உடைய விலங்கு. ✔ அமீபா: போலிக்கால்கள் (Pseudopodia) மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. பரமேசியம் புறத்தோல் ரோமமான சிலியா மூலம் நகர்கிறது. ✔ வேகமான விலங்குகள்: ...