TNTET Special TET Science Health and Hygiene Notes
உடல் நலமும் சுகாதாரமும்
1. ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் பயன்கள்
- ஆற்றல் தரும் உணவு: கொழுப்பு.
- உடல் வளர்ச்சி: புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- உயிர் வேதிவினை: வைட்டமின்கள் உடலில் நடைபெறும் உயிர் வேதிவினைகளுக்கு உதவுகின்றன.
- மொத்த ஊட்டச்சத்துக்கள்: மனித உடலுக்கு 7 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
- நீரின் அளவு: தினமும் 2 லிட்டர் (8 டம்ளர்) நீர் அருந்த வேண்டும்.
- இரும்புச் சத்து: இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமாகும்.
2. வைட்டமின்களும் குறைபாட்டு நோய்களும்
- வைட்டமின்கள் A, B, C, D, E, K என பல வகைப்படும்.
- நீரில் கரைபவை (B, C)
- கொழுப்பில் கரைபவை (A, D, E, K)
| வைட்டமின் | உணவு ஆதாரங்கள் | குறைபாட்டு நோய்கள் & அறிகுறிகள் |
|---|---|---|
| வைட்டமின் A | கேரட் | மாலைக்கண் நோய் |
| வைட்டமின் B | தானியங்கள், இறைச்சி | பெரி-பெரி (நரம்பு பலவீனம்) |
| வைட்டமின் C | ஆரஞ்சு, நெல்லிக்காய், தக்காளி, சிட்ரஸ் பழங்கள் | ஸ்கர்வி (ஈறுகளில் இரத்தக்கசிவு) |
| வைட்டமின் D | சூரிய ஒளி, பால், முட்டை,மீன் | ரிக்கெட்ஸ் (வளையும் எலும்பு) |
| வைட்டமின் E | ஆப்பிள், கீரைகள், காய்கறி, தாவர எண்ணெய்,பாதாம், வேர்க்கடலை | மலட்டுத் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு |
| வைட்டமின் K | பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ்,ப்ரோக்கோலி | தொடர்ச்சியான இரத்தக்கசிவு |
குறிப்பு: ஆரஞ்சுப் பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு அதிக வைட்டமின் C உள்ளது.
3. புரதக் குறைபாட்டு நோய்கள்
- குவாஷியோர்கர் (Kwashiorkor): வளர்ச்சி குறைபாடு, முகம் மற்றும் கால் வீக்கம், வயிற்றுப் போக்கு மற்றும் உப்பிய வயிறு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
- மராஸ்மஸ் (Marasmus): மெலிந்த உடல் தசை மற்றும் மெதுவான உடல் வளர்ச்சி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
4. தாது உப்புகளும் குறைபாட்டு நோய்களும்
- கால்சியம்: ரிக்கெட்ஸ்.
- பாஸ்பரஸ்: ஆஸ்டியோ மலேசியா.
- அயோடின்: கிரிட்டினிசம் மற்றும் முன்கழுத்து கழலை நோய் (காய்டர்).
- இரும்புச்சத்து: இரத்த சோகை.
5. நுண்ணுயிரிகளும் தொற்று நோய்களும்
- நுண்ணுயிரிகள் அமைப்பு:
- பாக்டீரியாக்களுக்கு தெளிவான செல் சவ்வு / உட்கரு உறை கிடையாது.
- வைரஸ்கள் நியூக்ளிக் அமிலம் (DNA அல்லது RNA) மற்றும் புரத உறையால் ஆனவை.
- ரிட்ரோவைரஸ் (Retrovirus) என்பது DNA விற்குப் பதிலாக RNA-வைக் மரபுப் பொருளாகக் கொண்ட வைரஸ் ஆகும்.
- நோய்க்கடத்திகள் (Vectors): நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் வெக்டார்கள் அல்லது நோய்க்கடத்திகள் எனப்படுகின்றன.
- அசுத்தமான நீர் மூலம் பரவுபவை: காலரா, நிமோனியா.
- அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுபவை: டைபாய்டு (காய்ச்சல்), காலரா.
- காற்று (இருமல், தும்மல்) மூலம் பரவுபவை: காசநோய், சாதாரண சளி, இன்புளுயன்சா.
- பாக்டீரியா நோய்கள்:
- காலரா - விப்ரியோ காலரே (அறிகுறி: கால் தசை பிடிப்பு).
- டைபாய்டு - சால்மோனெல்லா டைபி.
- காசநோய் (TB) - மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்.-BCG தடுப்பூசி
- பற்சிதைவு - பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. டெட்டனஸ் (கக்குவான்) - பாக்டீரியா.
- வைரஸ் நோய்கள்:
- சாதாரண சளி, இன்புளுயன்சா (குளிர்காய்ச்சல்).
- மஞ்சள் காமாலை (ஹெபடைடிஸ்) - ஹெபடைடிஸ் வைரஸ் (அறிகுறி: மஞ்சள் நிற சிறுநீர், கல்லீரல் பாதிப்பு).
- சின்னம்மை (Chickenpox) - வாரிசெல்லா ஜோஸ்டர் (Varicella zoster).
- இளம்பிள்ளை வாதம் (Polio), தட்டம்மை.
- கண் நோய்: விழிவெண்படல அழற்சி அல்லது இளஞ்சிவப்பு கண் நோய் (Pink eye) வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
6. டெங்கு மற்றும் ரேபிஸ் நோய்கள்
- டெங்கு காய்ச்சல்:
- இது DEN-1, 2 வைரஸால் ஏற்படுகிறது. இதை பரப்பும் கொசு 'ஏடிஸ் எஜிப்டி' ஆகும்.
- டெங்கு காய்ச்சல் இரத்தத் தட்டுகளின் (Platelets) எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைக்கிறது.
- ரேபிஸ் (வெறிநாய்க்கடி):
- இது ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டு பயப்படுதல்) நோயை ஏற்படுத்துகிறது.
- நோய் தாக்கிய நாயோ அல்லது விலங்கோ கடித்த 2 முதல் 12 வாரங்களில் கடுமையான காய்ச்சல் தோன்றும்.
7. தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதாரக் குறிப்புகள்
- குழந்தைப் பருவ தடுப்பூசிகள்: BCG, போலியோ (Polio), மற்றும் MMR.
- தோல் நோய்: லியூக்கோடெர்மா (Leukoderma) என்பது மெலனின் குறைபாட்டால் தோன்றும் ஒரு வகையான தோல் நோயாகும்.
- புகையிலை: புகையிலையை மெல்லுதல் வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
- தூக்கம்: சீக்கிரம் படுத்து சீக்கிரம் விழிப்பது உடலுக்கு நல்லது என பெஞ்சமின் பிராங்க்ளின் குறிப்பிட்டுள்ளார்.
Comments