கட், காப்பி, பேஸ்ட் வசதியைக் கண்டுபிடித்த கணிணி விஞ்ஞானி

1945 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தவர் லேரி. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். 1973 ஆம் ஆண்டு, ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆய்வு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த கட், காப்பி, பேஸ்ட் என்ற வசதியை லேரி கண்டுபிடித்தார்.



இந்த மையம் நாம் தற்போது கணிணிகளில் பயன்படுத்தும் விண்டோஸ் உள்ளிட்ட வரைகலை சூழல் இயங்குதள பயன்பாட்டைப் பற்றியும், அதை மவுஸ் என்ற கருவியைக் கொண்டு எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும் ஆரம்ப கால ஆய்வுகளை செய்தது.

1980 முதல் 1997 வரை லேரி டெஸ்லர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மகிண்டாஷ், குயிக்டைம், லிஸா, நியூடன் டேப்ளட் உள்ளிட்டவற்றின் உருவாக்கத்தில் லேரியின் பங்களிப்பும் இருந்தது. 1993 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாகப் பதவி உயர்வு பெற்றார். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து பிரிந்து தொடங்கப்பட்ட ஸ்டேஜ்காஸ்ட் என்ற நிறுவனத்தில் லேரி பின்னாட்களில் சேர்ந்து பணியாற்றினார்.


2009-ல் ஆரம்பித்து, அமேசான் மற்றும் யாஹூ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்த லேரி, யுஎக்ஸ் கன்சல்டன்ஸி என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் தொடங்கினார்.

கணிணியில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்றான கட், காப்பி, பேஸ்ட் வசதியைக் கண்டுபிடித்த கணிணி விஞ்ஞானி லேரி டெஸ்லர் 74 வயது  காலமானார். .

Comments

Popular posts from this blog

NMMS SAT 8th Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

TNNMMS SAT Social Science - Quiz 931 to 945- MCQ - T/M - Online Test - Part-63- 2022